சங்கரன்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்தக்காரர்களுக்கு அறிவுரை கூறினார். அங்கன்வாடி மையங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணியாளர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கினார். அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி கற்கும் திறனை பரிசோதனை செய்த ஆட்சியர் மாணவ மாணவிகளுக்கு கற்கும் திறனை அதிகரிக்க அறிவுரை வழங்கினார்.
Next Story

