ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பு

X
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் அவர்களின் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களை மாவட்ட நிர்வாகிகள மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். உச்சப்புளி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசின் நிவாரண நிதி வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், வேதாளை போஸ்டல் பின்கோடு விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வலியுறுத்த வேண்டும் எனவும், பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட முகமதியாபுரம் (குந்துகால்) பகுதியில் தனி ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும், பாம்பன் பாலத்தில் மழை நீர் வடிகால் குழாய் அடைக்கப்பட்டதை சரி செய்ய வேண்டும் எனவும், வேதாளை வலையர்வாடி முதல் உள் பேருந்து நிலையம் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. SDPI கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திய கோரிக்கைகள் அனைத்தையும் விரைவாக நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தாளர். இந்த நிகழ்வில், மாவட்ட பொதுச்செயலாளர் முகமது சுலைமான், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சேக் ஜலால், மண்டபம் ஒன்றிய தலைவர் பவுசுல் அமீன் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர
Next Story

