பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு
X
Bhavanisagar King 24x7 |25 Jan 2025 1:26 PM IST
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு
பவானிசாகர் அருகே தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு பவானிசாகர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது - பவானிசாகர் அருகே உள்ள இக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்தவர் கெளதம் அன்னூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அசின் இவர்களுக்கு 11/2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு டிக்னா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று வெள்ளியம்பாளையம் புதூரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. திடீரென குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு தடுப்பூசி போட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு இருந்தவர்கள் உடனடியாக குழந்தையை சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து குழந்தையின் பெற்றோர் தரப்பில் பவானிசாகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story