நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம்

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம்
X
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம்
தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்ப ணியாளர் சங்கம் சார்பில் ஜனவரி 20-ந் தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு உட்கோட்ட தலைவர் செந்தில்குமார், பொருளாளர் கனகராசு, சின்னச்சாமி முருகேசன், கோட்ட செயலாளர் தில்லையப்பன், கோட்டத் துணைத்தலைவர் தங்கவேல், இணைச் செயலாளர் மணிமொழி ஆகியோர் தாராபுரம் பூக்கடை கார்னர், கடைவீதி, டி.எஸ்.கார்னர், வணிக கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மக்களை சந்தித்து  கையெழுத்து பெற்றனர். அப்போது சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி பனிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
Next Story