குடிசை வீடு தீப்பற்றி எரிந்து பெண் உயிரிழப்பு

தேநீர் வைக்க விறகடுப்பை பற்ற வைத்த பெண் தீ விபத்தில் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ரங்கனூர் அடுத்துள்ள  கட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் இவரது மகள் கஸ்தூரி என்கிற சரஸ்வதி(43) இவர் கணவனை பிரிந்து தனது தந்தைக்கு சொந்தமான குடிசை வீட்டில்  அருகில் வசித்து வந்தார். நூற்பாலைக்கு கூலி தொழிலாளியாக சென்று கொண்டிருந்தவர் தற்பொழுது அப்பணிக்கு செல்லாமல் கால்நடைகளை சொந்தமாக வாங்கி அதனை மேய்த்து அதில்  வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று அதிகாலை தேநீர் வைப்பதற்காக வீட்டின் முன்பு இருந்த விறகு அடுப்பை பற்ற வைத்த பொழுது எதிர்பாராத விதமாக குடிசை வீட்டின் முன் பகுதியில்  தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி அருகில் இருந்த தனது தந்தை பெருமாளை எழுப்பியுள்ளார். அவர் எழுந்து வருவதற்குள் தீமளமளவென பரவியதால் வீட்டில் உள்ள பொருட்களை மீட்பதற்காக சரஸ்வதி வீட்டிற்குள் சென்று விட்டார். இதனை அறியாத பெருமாள் தனது மகள் அக்கம் பக்கத்தில் அழைக்க சென்று இருப்பார் என நினைத்துவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரின் விரைந்து வந்த வெப்படை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது உடல் கருகிய நிலையில் சரஸ்வதி சடலமாக கிடந்துள்ளார்.  தகவல் அறிந்த வெப்படை போலீசார் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் தேநீர் வைப்பதற்காக விறகடுப்பு பற்ற வைத்த பொழுது பெண் உடல் கருகி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
Next Story