சாலையில் மரண பள்ளங்கள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் மரண பள்ளங்கள் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
X
ஈஞ்சம்பாக்கம்-சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம்-சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலை உள்ளது.காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலை வழியாக செல்லும் பயணியர், கூரம் கேட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, செம்பரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம் மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கு செல்கின்றனர்.இந்த சாலை, குண்டும், குழியுமாக மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. மழைக்காலத்தில், சாலையில் உருவாகியுள்ள மரண பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து செல்லும் அபாயம் உள்ளது. எனவே, ஈஞ்சம்பாக்கம்-சிறுவாக்கம் மோட்டூர் கிராமத்திற்கு செல்லும், பிரதான நெடுஞ்சாலையை சம்மந்தப்பட்ட துறையினர் சீரமைக்க முன் வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story