பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு விலை வீழ்ச்சி.

X
Paramathi Velur King 24x7 |25 Jan 2025 8:40 PM ISTபரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர், ஜன.25- பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. மரவள்ளிகி இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.6 ஆயிரத்து 800 வரை விற்பனையானது. தற்பொழுது டன் 1-க்கு ரூ. 500 வரை சரிவடைந்து ரூ.6 ஆயிரத்திற்கு 300-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது விலை எதுவும் மாறாமல் கடந்த வாரம் விற்பனையான அதே விலையான ரூ.7ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. தற்போது மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் மரவள்ளி கிழங்கு கிழங்கு விலை சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
