அதிமுகவில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்

X
அமமுக விருதுநகர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெகதீசன், மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்... தமிழகம் முழுவதும் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய விருதுநகர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெகதீசன்,மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக், பெண் வழக்கறிஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு ராஜேந்திரபாலாஜி வாழ்த்து தெரிவித்து அதிமுக உறுப்பினர் படிவத்தை வழங்கினார்.
Next Story

