சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நகர் வாகன விழிப்புணர்வு பேரணியை ஏ.எஸ்.பி மதிவாணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நகர்  வாகன விழிப்புணர்வு பேரணியை ஏ.எஸ்.பி மதிவாணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
X
சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் போலீசார் பொதுமக்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஏ.எஸ்.பி மதிவாணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்*
அருப்புக்கோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு நகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் போலீசார் பொதுமக்கள் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஏ.எஸ்.பி மதிவாணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஏ.எஸ்.பி அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணியை ஏ.எஸ்.பி மதிவாணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மதுரை ரோடு, புதிய பேருந்து நிலையம், பஜார், அகமுடையார் மஹால், திருச்சுழி ரோடு, காந்தியின் நகர் வழியாக சென்று கஞ்சநாயக்கன்பட்டியில் சென்று நிறைவுற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.‌ இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, தாலுகா காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட போலீசார் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌
Next Story