சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ பேட்டி

சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ பேட்டி
X
சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ பேட்டி
சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ, வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதா விவகாரத்தில் திமுக எம்பி ஆ ராசா உட்பட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை தான் பார்க்க முடிகிறது. அதேபோல மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா-காசி விஸ்வநாதர் கோயில் விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட மதவாத சக்திகள் இந்துக்கள் முஸ்லிம்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாஜகவின் பத்தாண்டு ஆட்சி கால தோல்வியை மூடி மறைப்பதற்காக வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கையில் எடுத்து உள்ளது. குடியரசு தின விழா ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்து இருக்கு செல்வது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செல்வது செல்லாமல் இருப்பது அவரது கட்சி சார்ந்த முடிவு. இதில் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநர் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிப்பது நல்லது. ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் கலந்து கொண்டால் அவர் கட்சிக்கு தான் கேடு. புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார் நல்லா இருக்கட்டும் என தெரிவித்தார்.
Next Story