நெகிழி சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் மாபெரும் நெகிழி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் இன்று திருச்செங்கோடு அம்மன் குளம் அருகே நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள் தலைமை தாங்கினார் சுரேஷ் பாபு வரவேற்றுப் பேசினார் நகர துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார் அவர் பேசும்போது இன்று சேகரிக்கப்படும் நெகிழிகள் சிமெண்ட் அலைகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடியசைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் திருச்செங்கோடு பேருந்து நிலையம் தினசரி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் வீசி எறியப்படும் நெகிழிகளை சேகரித்தனர் திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் தன்னார்வ அமைப்பினர் பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த சுகாதாரப் பணியில் நெகிழிகளை சேகரித்தனர் இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த் நகராட்சி பொறியாளர் சரவணன் தேசிய பசுமை படை இயக்கம் சுழற்சங்கம் டிவைன் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நெகிழிகளை சேகரித்து கொடுத்தனர்
Next Story




