திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில் திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா

திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில் திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா
X
உடையார்பாளையத்தில் திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில் திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
அரியலூர் ஜன.26- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் இயேசுபாலன் அரசுஉதவிபெறும் தெடக்கப் பள்ளியில் 2025ஆவது திருவள்ளுவர் தினவிவை முன்னிட்டு உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பாக திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது, நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ம. விமலாரோஸ்லின் தலைமை வகித்தார்.மன்ற செயலர் புலவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் லாரன்ஸ்பீட்டர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மன்ற தலைவர் பேராசிரியர் தஸ்தகீர் கலந்து கொண்டு உலக பொது மறை திருக்குறள் வாழ்வியல் நெறி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். போட்டியில் வெற்றி மாணவமாணவிகளுக்கு சான்றிதழ், திருக்குறள் புத்தகம் வழங்கினார் மேலும் மாவட்ட அளவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் கோவையில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவி ஜெயசாராவுக்கு மன்றத்தலைவர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார், மேலும் திருகுறளை மாணவமாணவிகள் ஒவ்வோருநாளும் படித்து 1330 குறளையும் மனனம் செய்து ஒப்பித்தால் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தொகை ரூ 25 ஆயிரம் வழங்குகிறது என்றார், இதை நீங்கள் பயன்படுத்தி வாழ்வில் உயரவேண்டும் என்றார். நிகழ்வில் ஆசிரியர்கள் ஜுலியட் நிர்மலா காந்தி, மெர்சி, பூங்கொடி, ஷீலா, செபஸ்டின், லூர்து மேரி, திருவள்ளுவர் ஞானமன்ற பொறுப்பாளர் தமிழாசிரியர் இராமலிங்கம், தமிழ் ஆர்வலர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் ஆசிரியர் வேம்பு நன்றி கூறினார்.
Next Story