வீரராகவ சுவாமி கோவிலில் தை பிரமோத்சவ கருட சேவை கோபுர தரிசனம்
திருவள்ளூர் வைத்திய வீரராகவ சுவாமி கோவிலில் தை பிரமோத்சவ கருட சேவை கோபுர தரிசனம் திருவள்ளூர் வைத்திய வீரராகவ சுவாமி கோவிலில் இன்று அதிகாலை கருட சேவை கோபுர தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது சென்னை செங்குன்றம் மணவாளன் நகர் ஸ்ரீபெரும்புதூர் திருப்பாச்சூர் பூண்டி பெரியபாளையம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரி புத்தூர் சூலூர்பேட்டை நாகலாபுரம் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் வந்திருந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய வீரராகவப் பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர் கடந்த வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் தாய் 24-ஆம் தேதி த்வஜாரோகனம் புறப்பாடு நடைபெற்றது 25-ம் தேதி சனிக்கிழமை அம்ச வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் இன்று 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தை பிரமோத்சவ விழாவின் மூன்றாம் நாளான இன்று வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் கோபுர தரிசனமும் கருட சேவை நிகழ்ச்சியையும் வெகு சிறப்பாக நடைபெற்றது இன்று இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடைபெற உள்ளது வருகிற புதன்கிழமை 29-ஆம் தேதி தை அமாவாசை முன்னிட்டு ரத்னாங்கி சேவையும் சொர்ணாபிஷேகம் மாலை மூன்றரை மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலம் வெள்ளிச் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது இரவு 7:00 மணிக்கு யானை வாகனம் புறப்பாடு நடைபெற்று வருகிற 30-ஆம் தேதி வியாழக்கிழமை தேருக்கு எழுந்தருளி வீரராகவ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி தாயாருடன் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்
Next Story






