தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

X
திருக்கோவிலூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வல துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுதா வரவேற்றார். தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். தொடர்ந்து மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. தேர்தல் துணை தாசில்தார் சிட்டிபாபு, வருவாய் ஆய்வாளர் அன்பரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

