காங்கேயம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழா

காங்கேயம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழா
X
காங்கேயம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு பரிசுகள் வழங்கப்பட்டது
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பெரிய இல்லியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளி இணைந்து ஒரே பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தில் ஆண்டு விழா மற்றும் விளை யாட்டு போட்டிகளுக்கு பரிசளிப்பு விழாவை நடைபெற்றது. விழாவில் முன்னாள் காங்கேயம் ஒன்றிய பெருங்குழு தலைவர் டி. மகேஷ் குமார், முன்னாள் பொத்தியபாளை யம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வட்டார கல்வி அலுவலர்கள் ராமச்சந்திரன் மற்றும் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தன பாக்கியம் மற்றும் ஈஸ்வரி ஆகியோர் ஆண்டு அறிக்கை வாசித்தனர். மாவட்ட அளவில் கலை-இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாமியப்பன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
Next Story