புட்டுவிக்கி: மின் கம்பத்தின் மீது கார் மோதி விபத்து !

X
கோவை புட்டுவிக்கி ரோட்டில் நேற்று ஒரு கார் மின்கம்பம் மீது மோதியதில் மின்கம்பம் சாய்ந்து மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அப்பகுதிக்கு மின் விநியோகம் தடைபட்டது. விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பத்தை மாற்றும் பணி நடந்து வருவதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவை மேற்குப் பகுதி புலனாய்வு பிரிவு போலீசார், கார் ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

