அரசுப் பள்ளியில் கொடியேற்றிய முன்னாள் அமைச்சர்

X
விருதுநகரில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மரியாதை செலுத்தினார்.. நாடு முழுவதும் இன்று 76 வது குடியரசு தின விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுப்பைய நாடார் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மூவர்ண தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.. பின்னர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகரக் கழக துணைச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்..
Next Story

