மொழிப்போர் தியாகி பிறந்த தினத்தை முன்னிட்டு திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனாரின் அவர்களின் 130பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகரில் அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் ...* தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் 1895 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவர் மதராஸ் என்ற தமிழ்நாட்டை தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் 1956ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி தொடர்ந்து 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13ம் தேதி இன்னுயிர் நீத்தார் அவருடைய தியாகத்தை போற்றும் வகையில் அவரது பிறந்த தினமான ஜனவரி 26ஆம் தேதி மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள தியாகி சங்கரலிங்கனாரின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் அரச அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
Next Story

