மாநில அளவிலான கபடி போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்

மாநில அளவிலான கபடி போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்
X
தாராபுரத்தில் மாநில அளவிலான கபடி போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்
தாராபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தாரை நண்பர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் இணைந்து ஜூனியர் மற்றும் சீனியர் வீரர்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடத்தியது. இந்தப் போட்டி மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல் விழி தொடங்கி வைத்தார். இதில் தொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி அய்யப்பன், தாராபுரம் தொண்டர் அணி ஷாஜகான், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் விழிப்புணர்வு மற்றும் கண்கா ணிப்பு குழு உறுப்பினர் கே.வி. சிவசங்கர், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிந்தனைச் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டினை கலைச்செல்வன் செய்திருந்தார்.
Next Story