இன்போசிஸ் நிறுவனத்துடன் சங்கரா கல்லுாரி ஒப்பந்தம்

X
காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காகவும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களுடன். மாணவர்களின் திறன் பயிற்சிக்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டு வகுப்பு நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக. மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் ஸ்பிரிங்போர்டு நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு மென்திறன் மற்றும் நுண்திறன் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் திருமலா அரோகி ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, எந்தெந்த வகையில் திறன் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி கல்லுாரி முதல்வர் எடுத்துரைத்தார்.
Next Story

