பல்லடத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

பல்லடத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
X
பல்லடத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நகரக் கழகச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
பல்லடத்தில் நகர அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நகரச் செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பானு பழனிச்சாமி, அம்மா பேரவை மரக்கடை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தர்மராஜன் வரவேற்றார்.இதில் நிர்வாகிகள் நாராயணசாமி, ஆசிரியர் ரங்கசாமி, கந்தசாமி, ஐ.டி. விங்க் ரமேஷ், ரவிச்சந்திரன், உதயகுமார், பாலு, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிகளை துரிதப்படுத்துவது மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியினை சிறப்பான முறையில் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், பல்லடம் நகராட்சி சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story