ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய பொதுமக்கள்

X
பெரம்பலூர் அருகே நொச்சிக்குளம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய பொதுமக்கள் .. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நொச்சிகுளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் அந்த ஊரின் ஊராட்சி செயலாளராக உள்ள பானுமதி ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி பெறாமல் போன் மூலம் ஓடிபி பெற்று 98 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்தாக கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம பொதுமக்கள் பூட்டினர்கள். தகவல் அறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பானுமதியை தற்காலிக பணியிட நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளார் மேலும் பானுமதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.அதனை அடுத்து கிராம சபை கூட்டம் தற்போது நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
Next Story

