தச்சூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

தச்சூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
X
கூட்டம்
கள்ளக்குறிச்சி ஒன்றியம், தச்சூர் ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பிரசாந்த் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் தச்சூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு டிச.31 வரையிலான வரவு செலவுக் கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிய புதிய அட்டைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் சுய உதவிக் குழுவில் சேராத மகளிரை மகளிர் சுய உதவிக் குழுக்களில் சேர்த்து கடனுதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இப்பகுதியில் ரேஷன் கடைகளில் சீரான பொருட்கள் விநியோகம், கால்நடைகளுக்கு சிகிச்சை, பாலம் அமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Next Story