கோவை: பல்வேறு மாநிலத்தவர் கலந்து கொண்ட பைக் ரேஸ் !

கோவை மாநகர மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தேசிய அளவிலான பைக் ரேஸ் நடைபெற்றது.
கோவை கொடிசியா தொழிற் கூட கண்காட்சி வளாகம் செல்லும் வழியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கோவை மாநகர மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தேசிய அளவிலான பைக் ரேஸ் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தேசிய அளவிலான பைக் ரேஸ் நடைபெறுவதால் தமிழ்நாடு கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பைக் ரேஸ் நடைபெறுவதை ஒட்டி கோவை மாவட்டத்தை சேர்ந்த இருசக்கர வாகன பிரியர்கள் ஆர்வத்தோடு இந்த காட்சியை கண்டு களித்தனர்.
Next Story