திருப்பத்தூரில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தனிநபர் குடும்பத்துடன் கருப்பு கொடி ஏந்தி உண்ணாவிரத போராட்டம்.

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தனிநபர் குடும்பத்துடன் கருப்பு கொடி ஏந்தி உண்ணாவிரத போராட்டம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்ககங்கரை பகுதியைச் சேர்ந்த பாஜக கந்திலி ஒன்றிய செயலாளர் சுரேஷ் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்புக்காக செயல்படுகிறது எனக் கூறி தனது வீட்டின் முன்பு நூதனமான முறையில் பேனர் வைத்தும் மேலும் கருப்பு கொடி ஏந்தியும் தனது குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணங்கள் மாடபள்ளியில் உள்ள பருத்தி குடோனில் ஊழல் நடைபெறுகிறது இந்து அறநிலை சொந்தமான திருக்கோவிலில் தனிநபர் ஆதாயம் குறித்தும் நீர்நிலை மற்றும் ஆக்கிரமப்புகளை அகற்றுவது குறித்தும் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலக உதவிய உடன் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று வருவதாகவும் ஆயிரம் கோடி ரூபாய் தனியார் மண் குவாரி ஒப்பந்ததாரர் முறைகேடு பத்திர பதிவுத்துறையில் நடைபெறும் ஊழல் குறித்தும் காக்கங்கரை கூட்டுறவு வங்கியில் அவலநிலை உள்ளிட்ட 10 முக்கிய காரணங்கள் குறித்து மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி குடியரசு தின விழாவான இன்று நூதனமான முறையில் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து தனது வீட்டின் முன்பு பேனர் வைத்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்…
Next Story

