காட்டு யானை அட்டகாசம்

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கேர்மாளம் மற்றும் திங்களூர் ஊராட்சியில் சுமார் 40- க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம் விவசாய சார்ந்த கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது மானாவாரி நிலம் நிலத்தில் மக்காச்சோளம் மற்றும் ராகி பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றைக் யானை பேடர்பாளையம், மற்றும் காடட்டி ,பூதாளபுரம்,கிராமத்தில் விவசாய நிலங்களில் புகுந்து மக்காச்சோளம் மற்றும் ராகி பயிர்களை தொடர்ந்து சேதாரம் செய்து வருகிறது. யானையை விரட்டும் விவசாயிகளையும் யானை துரத்துகிறது. பூதாளபுரம் கிராமத்தை சேர்ந்த ஜடைடேடாதப்பா,சந்ரா, குருசாமி, சதசிவப்பா,நிரஞ்சன் என 5 விவசாயிகள் மானாவாரி விவசாயிகள் தங்கள் விவசாய தோட்டத்தில் அறுடை செய்த மக்காச்சோளத்தை உலர்த்துவதக்காக ஜடேமாதப்பா என்பவர் தோட்டத்தில் குவித்து வைத்திருந்தனர்.அங்கையே குடிசை அமைத்து இரவு நேரத்தில் காவல் காத்து வந்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை குடிசையை சேதாரம் செய்தது சத்தம் கேட்டு பார்த்தபோது யானை நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அணைவரும் குடிசையை விட்டு தப்பி ஒடி உயிர் தப்பினர்.யானை குடிசையை முற்றிலும் சேதாரம் செய்துவிட்டு வனப்பகுதியில் சென்றது.தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

