சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தொழிலாளர் சங்கம் மனு
15 பேர் நகராட்சி அலுவலகம் முன்பு மாலை நேர டிபன் கடை நடத்தி வருகின்றோம். நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் முறையாக அனுமதி பெற்று கடந்த 10 ஆண்டுக்கு மேலாக கடை நடத்தி வருகின்றோம் இந்நிலையில் எங்களை திடீரென்று நகராட்சி அலுவலகம் காலி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், நாங்கள் 15 பேர் நகராட்சி அலுவலகம் முன்பு மாலை நேர டிபன் கடை நடத்தி வருகின்றோம். நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் முறையாக அனுமதி பெற்று கடந்த 10 ஆண்டுக்கு மேலாக கடை நடத்தி வருகின்றோம் இந்நிலையில் எங்களை திடீரென்று நகராட்சி அலுவலகம் காலி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே எங்களின் 15 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து உணவகம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
Next Story



