மதுவை ஒழிப்போம் கோரிக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

மதுவை ஒழிப்போம் கோரிக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
X
நாகை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரி திடலில் இருந்து, தானம் அறக்கட்டளை சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம், மதுவை ஒழிப்போம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வாக்கத்தான் என்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள், மதுவை ஒழிப்போம், வறுமையை விரட்டி அடிப்போம் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பிய படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கடைத்தெரு, பெருமாள்கோவில் தெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தனியார் திருமண மண்டபத்திற்கு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தடைந்தனர். தொடர்ந்து, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள், மீன்வளத்துறை கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த வல்லுநர்கள், கிராமப்புற பெண்கள், காளான் வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காய்கறி தோட்டம் அமைப்பது, சுய தொழில் செய்து எவ்வாறு பொருள் ஈட்டுவது ஆகிய சுயதொழில் தொடங்குவது குறித்த பயிற்சிகளை அளித்தனர். நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக கீழ்வேளூர் தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி பொறுப்பு அதிகாரி டாக்டர் ஜி.ரவி, நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். சி.சுரேஷ் , தலைஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் டாக்டர் வி.அலமேலு, கனரா வங்கி நாகை கிளை முதன்மை மேலாளர் ஜெயந்தி ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தின் நோக்கம் குறித்து, தானம் அறக்கட்டளையின் நாகை மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கண்ணன் விளக்கினார். பின்னர், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story