தென்னடார் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில்

தென்னடார் ஊராட்சியில் நடந்த கிராம சபா கூட்டத்தில்
X
கலைஞர் கனவு இல்லம் கட்ட 15 பயனாளிகள் தேர்வு
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தென்னாடர் ஊராட்சியில், குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபா கூட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய இளநிலை அலுவலக பற்றாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக விவசாய அணி துணை அமைப்பாளருமான அன்புவேலன், கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு வைரக்கண்ணு, ஊராட்சி செயலாளர் அருள் தாஸ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தென்னடார் ஊராட்சியில், சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, ஒன்றாம் நம்பர் வாய்க்கால் மற்றும் கிழக்காடு குடிநீர் டேங்க் அருகில் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் மனுக்களை கொடுத்தனர். மேலும், தென்னடார் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு தகுதி உடைய பயனாளிகள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story