காவல் சிறப்பு பெண் சார்பு ஆய்வாளர் பணி இடை நீக்கம்

காவல் சிறப்பு பெண் சார்பு ஆய்வாளர் பணி இடை நீக்கம்
X
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் காவல் நிலைய சிறப்பு பெண் சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர் ஏற்கெனவே கீழச்செவல்பட்டி காவல் நிலையத்தில் பணி புரிந்தார். அப்போது ராஜேஸ்வரியின் சகோதரி முகவராக இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி காவலர்கள், பொதுமக்கள் என பலரை முதலீடு செய்ய சொல்லியுள்ளார். அதை நம்பி ஏராளமானோர் பல லட்சம் ரூபாயை அந்த நிதி நிறுவனத்தில் செலுத்தினர். ஆனால் அந்த நிதி நிறுவனம் பணத்தை திருப்பி தரவில்லை . இதனால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
Next Story