பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு

X
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர் இது சம்பந்தமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 25 லட்சமும் ,காயம் அடைந்தவர்களுக்கு ரூ 15 லட்சமும் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியில் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மணு... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மாரியம்மாள் பட்டாசு ஆ லையில் நடந்த வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பந்தமாக தேசிய பசுமைப் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இதனை உச்சநீதிமன்றமும் விசாரணை செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஆனால் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சொன்னதைப் போல் தமிழக அரசு பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 15 லட்சமும் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தது . உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடந்த நான்கு வருடமாக தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றும் உடனடியாக தமிழ அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கடந்த 23ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா ராமதாசு அவர்கள் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்படுத்தி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர் பேட்டி: டேனியல் - மத்திய மாவட்ட செயலாளர்
Next Story

