கபடி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு

கபடி போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு
X
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்றாம் இடத்தை பிடித்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் ரத்னசாமி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அரியலூர்,, ஜன.27- அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பாரதியார் தினவிழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 19 வயதுக்குட்பட்டோர் பெண்கள் கபடி போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்த மாணவிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் சிவகுமார், உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனையடுத்து போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவிகளை தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. பள்ளித் தாளாளர் எம்.ஆர்.பாலசுப்பிரமணியன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story