சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு கூட்டம்
X
சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு கூட்டம்
திருச்செங்கோடு ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் உள்ளது இந்த ஊராட்சிகளில் தமிழக அரசின் கிராம ஊராட்சிகள் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மாநில நிதி குழு மானியம், எஸ் ஐ டி எஸ் (ஜி எப்) நிதி, எஸ் ஐ டி எஸ், சி எப் எஸ் ஐ டி எஸ், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம் ( 15 வது நிதி குழு மானியம், 15 ஆவது நிதி குழு சுகாதார மானிய திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆகியவற்றில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2021 முதல் ஜனவரி 25 வரை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 8 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 436ரூபாய்க்கான பணிகள் நிலுவையில் உள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினரின் ஆய்வு கூட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், 26 ஊராட்சிகளின் செயல் அலுவலர்களிடம் பணிகள் எந்த நிலையில் உள்ளது. ஏன் காலதாமதம் ஆகிறது, ஒப்பந்ததாரர்கள் சரிவர செய்கிறார்களா இல்லையா, ஒப்பந்ததாரர்களுக்கான தொகைகள் வழங்கப்பட்டுள்ளதா? எதன் காரணமாக பணிகள் நிலுவையில் உள்ளது, அரசு ஒதுக்கும் நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா? மக்களிடம் சென்று சேருகிற வகையில் உள்ளதா என்பது குறித்து அனைவரிடமும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார். இதற்கு முறையாக அதிகாரிகள் பதில் அளித்தனர். சில திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், சில திட்டங்கள் முடிந்து பில்லுக்காக வெயிட் செய்து கொண்டிருப்பதாகவும், சில பணிகள் காண்ட்ராக்டர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் மாற்று டெண்டருக்கு காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் பேசும் போது அரசு மக்களுக்கு செய்யும் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதும் செய்யாமல் விட்டு அரசுக்கு கெட்ட பெயர் வாங்கித் தருவதும் அதிகாரிகள் தான் எனவே நீங்கள் அரசு ஒதுக்கும் நிதியை முழுமையாக முறையாக பயன்படுத்தி அரசுக்கு நல்ல பெயர் உருவாக்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்அடுத்த கூட்டம் நடப்பதற்குள் ஒதுக்கப்பட்ட கால அளவுக்குள் அனைத்து படிகளும் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் தொடர்ந்துஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்களின் ஆய்வு பணிகள் ஒவ்வொரு ஊராட்சியாக நடைபெற உள்ளது அப்போது எந்தப் பணியும் நிலுவையில் இருப்பதாகவோ, முடிக்கப்படாமல் இருப்பதாகவோ, பணிகளில் ஏதும் தவறு இருப்பதாகவோ, தெரியக்கூடாது. அதிகாரிகள் முழுமையாக செயல்பட வேண்டும், எந்த காரணமும் கூறக்கூடாது என கூறினார்.ஆய்வுக் கூட்டத்தில் அட்மா தலைவர் தங்கவேல் ஊரக வளர்ச்சி துறை திருச்செங்கோடு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சாந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சங்கர்வட்டாரப் பொறியாளர் சுமதி உதவி பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story