கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
திருச்செங்கோடு வட்டத்தில்76 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர்.அதில் இருவர் தற்போது பல்வேறு காரணங்களால் பணியில் இல்லாத நிலையில் 74 பேர் பணியில் உள்ளனர்.திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் கவிதா கடந்த ஏழு வருடங்களாக திருச்செங்கோடு வட்டத்திற்குள்ளேயே பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்களை பேசுவதாகவும் மரியாதை குறைவாக நடத்துவதாகவும் கால நேரம் எதுவும் இன்றி பணிகளை செய்யச் சொல்லி வலியுறுத்துவதாகவும் உடனடியாக செய்ய வேண்டும் என கூறுவதாகவும் ஆன்லைன் வேலை செய்யாத நிலையிலும் உடனடியாக சான்றுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தவராகவும் ஆராய் மூலம் தபால் கொடுக்க வேண்டிய பணிகளுக்கு ஆன்லைனில் அனுப்பிவிட்டு உடனடியாக பணியை செய்ய வேண்டும் என நள்ளிரவு நேரமாக இருந்தாலும் வற்புறுத்துவதாகவும் இதனால் தங்களது தனிப்பட்ட பணிகளை கூட செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் கவிதாவை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆண்கள் பெண்கள் என சுமார் 74 பேர் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவரை பணியிட மாற்றம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கின்றனர்.இதனால் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள பல்வேறு பணிகள் பாதிப்படைந்துள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தப் போராட்டம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவதுதலைமை இடத்து துணை வட்டாட்சியராக பணியாற்றி வரும் கவிதா கிராம நிர்வாக அலுவலர்களை மரியாதை குறைவாகவும் தரக்குறைவாகவும் பேசி வருகிறார் மேலும் நேரம் காலம் இல்லாமல் எந்தப் பணியை எப்போது செய்ய வேண்டும் என்கிற வரைமுறையும் இல்லாமல் பணியாற்ற சொல்லி வற்புறுத்துகிறார் ஆர்.ஐ மூலம் கொடுக்க வேண்டிய தபால்களை ஆன்லைனில் அனுப்பி உடனடியாக பணி முடிக்க வேண்டும் வலியுறுத்துகிறார் செய்ய தவறினால் உங்கள் மீது மெமோ கொடுப்பேன் என மிரட்டுகிறார் இதுகுறித்து சங்கத்தின் சார்பில் கவிதா அவர்களிடம் கேட்கச் சென்ற போது நான் அப்படித்தான் செய்வேன் ஏழு வருடங்களாக இங்கு பணியாற்றி வருகிறேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என கூறியதோடு நாங்கள் அவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக பொய் புகார் கூறியுள்ளார் ஏற்கனவே இவர் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் புகார் கொடுத்தபோது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் பேசி சரி செய்து கொள்ளலாம் என வட்டாட்சியர் கூறியதன் அடிப்படையில் தான் அவர் மீது புகார் கொடுக்காமல் இருந்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தோம் தற்போது அவர் வேண்டுமென்றே எங்கள் மீது அவரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி புகார் கொடுத்திருப்பதால் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் அவரை உடனடியாக பணி மாற்றம் செய்ய விட்டால் எங்களால் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உள்ளது என்பதை மாவட்டத்தை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறினார் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.
Next Story