தரிசு நிலங்களில் முட்புதர்கள் நீக்கி உழவு செய்ய மானியம்

தரிசு நிலங்களில் முட்புதர்கள் நீக்கி உழவு செய்ய மானியம்
X
தரிசு நிலங்களில் முட்புதர்கள் நீக்கி உழவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
அரியலூர் ஜன.27- அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளான சன்னாவூர் வடக்கு, சன்னாவூர் தெற்கு, கரைவெட்டி, குல மாணிக்கம், தூத்தூர், வடுகபாளையம், கோவிலூர், குருவாடி ஆகிய கிராமங்களில் இதர தரிசு நிலங்களை மற்றும் பயிரிடுவதற்கு ஏற்ற தரிசனங்களை உடைய தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் உள்ள முட்புதர்கள், மரங்கள், சிறு கற்கள் போன்றவற்றை நீக்குவதற்காகவும் நிலத்தினை சமன் செய்து உழுவதற்காகவும் மானியம் வழங்கப்படுகிறது. தனிப்பட்ட விவசாயிகள் தாங்களாகவோ அல்லது வாடகை இயந்திரங்கள் மூலமாகவோ இப்பணியை செய்யலாம் மேற்கண்ட பணிகளுக்கு தமிழக அரசு வேளாண்மை துறை மூலமாக எக்டர் ஒன்றிற்கு 50 சத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ 9ஆயிரத்து 600 வரை பின்ன ஏற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டர் வரை மானியம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தனிப்பட்ட விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சீர் செய்யப்பட்ட தரிசு நிலங்களில் பயிர்களை தேர்வு செய்து வேளாண்மை-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இதர திட்டங்களை ஒருங்கிணைத்து சாகுபடி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இத்தரிசு நிலங்கள் சாகுபடி நிலமாக மாற்றப்பட்ட விவரம் வருவாய் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் இதற்கு ஆதாரமாக இத்திட்டம் செயல்படுத்தியதற்கு கிராம நிர்வாக அலுவரால் வழங்கப்பட்ட முந்தைய ஆண்டு அடங்கல் நகல் மற்றும் நடப்பாண்டு அடங்கல் புகைப்பட ஆவணங்கள் திட்டத்திற்கு முன்பு மற்றும் பின்பு இணைக்க வேண்டும். முட்புதர்களை அகற்றி நிலத்தினை சமன் செய்து உழவு பணி மேற்கொள்ள ஒவ்வொரு பணிக்கும் அனுமதிக்கப்படும் செலவினம் மற்றும் மானிய விவரங்கள் பின்வரும் விபரப்படி அனுமதிக்கப்படும். . தரிசு நிலங்களில் முட்புதர்கள் நீக்கம் (புல்டோசர் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூ1500 விதம் 5 மணி நேரத்திற்கு 7500) . தரிசு நிலங்களை சமன்படுத்துதல் (பல் டேசர் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய்1500 வீதம் 5 மணி நேரத்திற்கு ரூபாய் 7500) . உழவு பணி மேற்கொள்ளுதல்( ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 700 வீதம் 6 மணி நேரத்திற்கு ரூ 4ஆயிரத்து200). மொத்த செலவினம் 19ஆயிரத்து200. இதில் 50% மானியம் ரூ 9600 வழங்கப்படும் மேற் கூறப்பட்ட பணிகளின் செலவில் மாறுபாடு இருந்தால் இவ்வினத்திற்கான மொத்த செலவில் சரி செய்து கொள்ளலாம். மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பினால் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ (இருப்பு கீழப்பழூர்) அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Next Story