திருமணிமுத்தாற்றில் சாக்கடை மற்றும் சாய க்கழிவு நீரால் கருநிறத்துடன், நுரையுடன் செல்லும் திருமணிமுத்தாறு...
Rasipuram King 24x7 |27 Jan 2025 8:42 PM IST
திருமணிமுத்தாற்றில் சாக்கடை மற்றும் சாய க்கழிவு நீரால் கருநிறத்துடன், நுரையுடன் செல்லும் திருமணிமுத்தாறு...
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் இருந்து திருமணிமுத்தாறு தொடங்கி சேலம் நகர் பகுதி,ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, எலச்சிபாளையம், பரமத்தி வேலூர் வழியாக சென்று திருமணிமுத்தாறு இறுதியாக காவிரி ஆற்றில் கலைக்கிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. திருமணிமுத்தாறில் சாக்கடை மற்றும் சாயக்கழிவு நீர் கலப்பதால் ஆற்றில் கரும் நிறத்துடனும், நுரையுடனும் நீரானது செல்கிறது. திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story