வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு
X
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி மனைவி மனு அளித்தார்
அரியலூர், ஜன. 27- சௌதியில் உயிரிழந்த தனது கணவரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி, அவரது மனைவி, அரியலூர் ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.அரியலூர் அருகேயுள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் வெங்கடாசலம்(36). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூலி வேலைக்கு சௌதிக்கு சென்ற இவர், கடந்த ஜன.10 ஆம் தேதி தனது மனைவி ராமாயிடம் கைப்பேசியில் தொடர்புக் கொண்டு,  வேலை கடிமையாக இருப்பதாக கூறி தெரிகிறது.இந்நிலையில், ஜன.13 ஆம் தேதி வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.  ஆனால் இதுவரை அவரது சடலம் அனுப்பி வைக்கப்படாததால், தனது கணவரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி அரியலூர் ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சடலத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும், ராமாயிக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகள் செய்து தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
Next Story