மயானத்தில்  ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் அமைக்கக் கோரிக்கை

மயானத்தில்  ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் அமைக்கக் கோரிக்கை
X
மயானத்தில்  ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர், ஜன. 27- அரியலூர் மாவட்டம், கோடங்குடி, கீழசிந்ததாமணியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு சொந்தமான மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.அக்கிராம மக்கள் அளித்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கு(வன்னியர்) சொந்தமான மயானத்தைச் சுற்றி உள்ள காலியிடங்களில், அரசு வழங்கிய பட்டா இடத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு, பட்டியலின மக்கள் குடியேறினர். அவர்கள் தங்களது  மயானத்தை ஆக்கிரமித்து, அங்குள்ள தகர கொட்டகையை சேதப்படுத்தியுள்ளனர்.  இது பெரும் பிரச்னையாகி கடந்த 2016 ஆம் ஆண்டு தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர், காவல் துறை முன்னிலையில், மயானத்தை அளந்து, சுற்றி வேலி அமைக்கப்பட்டது.தற்போது இதன் அருகில் வசிக்கும், கந்தன் மகன் குணசேகர், சொக்கன் மகள் கண்ணகி அவரது கணவர் ஆகியோர் கம்பி வேலியை  அகற்றி ஆக்கிரமித்துள்ளார். மேலும் ஊராட்சி தலைவரின் கணவரும், அரசு ஊழியருமான அம்பேத்கர் என்பவர் மயானத்திலுள்ள மரங்களை ஜெசிபி இயந்திரம் அகற்றி மயானத்தை சேதப்படுத்தியுள்ளார். மேலும் மாயனத்துக்கு செல்லும் பாதையில் கழிவறை கழிப்பதும் உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதே போன்ற செயல்கள் தொடர்ந்து நடைப்பெற்றால் அங்கு சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த மயானத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றி, தடுப்புச் சுவர்களை எழுப்பித் தரவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story