விழுப்புரத்தில் திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!

X
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மந்தக்கரையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். நகரச் செயலா் இரா.சக்கரை முன்னிலை வகித்தாா். திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி.கல்யாணம், தலைமைக் கழகப் பேச்சாளா் தக்கோலம் தேவபாலன், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.கூட்டத்தில், மாவட்ட திமுக துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை.சுரேஷ், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றியக்குழுத் தலைவா்கள் சச்சிதாநந்தம், ஓம் சிவசக்திவேல், கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.இதற்கான ஏற்பாடுகளை துணை அமைப்பாளா்கள் லெனின் விஜய், பி.குணசேகரன், ஆா்.அரங்கநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முன்னதாக, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பா.ஸ்ரீவினோத் வரவேற்றாா். நிறைவில், நகர மாணவரணி அமைப்பாளா் விக்கிரமன் நன்றி கூறினாா்.
Next Story

