வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு,

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த சேர்ந்த சங்கர் என்பவர் விஜிலாபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனம் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சங்கரின் தலை முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் உடனடியாக இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story

