சீமானைக் கண்டித்து செந்துறை தமிழச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சீமானைக் கண்டித்து செந்துறை தமிழச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X
மறைந்த திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து அரியலூர் மாவட்டம், செந்துறை பெரியார் சிலை முன் செந்துறை தமிழச் சங்கம் மற்றும் பெரியாரியல் உணர்வாளர்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், ஜன. 28- மறைந்த திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டித்து அரியலூர் மாவட்டம், செந்துறை பெரியார் சிலை முன் செந்துறை தமிழச் சங்கம் மற்றும் பெரியாரியல் உணர்வாளர்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழச் சங்கத் தலைவர் வெ.கடம்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலர் ச.அ.பெருநற்கிள்ளி கலந்து கொண்ட கண்டன உரையாற்றினார்.தமிழச் சங்க பொருளாளர் மதியழகன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், கங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட் செயற்குழு உறுப்பினர் இர.மணிவேல், விசிக மண்டல துண்ûச் செயலர் செ.வெ.மாறன், மாநில துணைச் செயலர் கருப்புசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முன்னதாக அனைவரும், அம்பேத்கர் சிலையிலிருந்து, பெரியார் சிலை வரை பேரணியில் ஈடுபட்டனர்.
Next Story