மலுமிச்சம்பட்டி: மாநகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு!

X
கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசின் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. மலுமிச்சம்பட்டி ஊராட்சியாகவே இருக்க வேண்டும். மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என கோஷமிட்ட மக்கள், இந்த மாற்றத்தால் 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும், வரிகள் உயரும், இலவச குடிநீர் கிடைக்காது, விவசாயிகளுக்கு கிடைக்கும் திட்டங்கள் கிடைக்காமல் போகும் எனக் கவலை தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பின்னர், ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

