நல்லம்பள்ளியில் ஆடுகள் விற்பனை ஜோர்

நல்லம்பள்ளி செவ்வாய் வார சந்தையில் 45 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறுவது வழக்கம் ஜனவரி 28 இன்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர் இன்று சிறிய அளவிலான ஆடுகள் 3000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 22000 ரூபாய் வரையில் விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் சுமார் 45 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story