கோவை: ரயிலில் கஞ்சா கடத்தல்- இருவர் கைது !

கோவை: ரயிலில் கஞ்சா கடத்தல்- இருவர் கைது !
X
அசாம் மாநிலத்திலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
அசாம் மாநிலத்திலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் நேற்று பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். கோவை ரயில் நிலையத்தில் வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் மணிப்பூர் மாநிலம் தொபால் பகுதியைச் சேர்ந்த நவுசத் கான் (22) மற்றும் முகமது முஜிபூர் ரகுமான் (27) என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, அவர்கள் யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி கடத்தி வந்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story