மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை

விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் நாளை ஜி எஸ் எல் வி எஃப் 15 ராக்கெட் ஏவப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி பழவேற்காடு ஆரம்பாக்கம் அண்ணாமலைசேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் நாளை ஜி எஸ் எல் வி எஃப் 15 ராக்கெட் ஏவப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி பழவேற்காடு ஆரம்பாக்கம் அண்ணாமலைசேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க தடை நாளை 29 1.2025 புதன்கிழமை அன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜி எஸ் எல் வி எப் 15 ராக்கெட் ஏவப்பட உள்ளதால் 29. 1.2025 அன்று காலை முதல் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதலத்தை ஒட்டி அமைந்த பொன்னேரி கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள மீனவ கிராம மக்களுக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளதால் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார் ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து ராக்கெட் ஏவும் காலங்களில் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்த்திடும் பொருட்டு கடல் வழியாக கரையில் இருந்து 15 நாட்டிங்கல் மைல் தொலைவிற்கும் பழவேற்காடு கலங்கரை விளக்கம் முதல் அர்மகான் கலங்கரை விளக்கம் வரை இரண்டு நாட்டிங்கல் மைல் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா (SHAR ) சார் கடற்கரை வரை சுற்றியுள்ள பகுதிக்குள் மீனவர்கள் யாரும் மீன்பிடித் தொழிலுக்கு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க 29ஆம் தேதி செல்ல வேண்டாம் என மீனவ கிராம மக்களுக்கும் மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story