வாணியம்பாடியில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேச்சு..

X
திருப்பத்தூரில் மாவட்டம் மாணவர்கள் இந்த வயதில், இலக்கை நிர்ணயித்து பயணியுங்கள், இலக்கு இல்லாமல் பயணிப்பது, மிகவும் ஆபத்தானது வாணியம்பாடியில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேச்சு.. திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையினர் இணைந்து நடத்திய விடுதிகளில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், நடைப்பெற்றது, இதில் பங்கேற்று மாணவர்களிடையே பேசிய ஆட்சியர் தர்ப்பகராஜ். எல்லோரும், அடையாளம் தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றோம், இந்த வயதில் நீங்கள் என்னவாக வேண்டும் என்ற அடையாள இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும், இலக்கு இல்லாமல் பயணித்தால், பேராபத்தில் முடியும், ஏதாவது ஒரு இலக்கை வையுங்கள், இல்லையென்றால், உங்களது இலக்கை கூரையின் மீது போடாதீர்கள் வானத்தின் மீது போடுங்கள், சாதாரண இலக்கை நோக்கி பயணிக்காதீர்கள், உயரந்த இலக்கை நோக்கி பயணியுங்கள், எண்ணித்தின் வலிமை மிக வலிமையானது, இந்த நிகழ்ச்சியை சரவர பயன்படுத்திக்கொண்டு, இந்த இடத்தைவிட்டு நீங்கள் என்னவாக வேண்டும் என தீர்மானித்து செல்லுங்கள் என பேசினார்.. மேலும் இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், விடுதிகாப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்..
Next Story

