காங்கேயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

காங்கேயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
X
காங்கேயத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.காங்கேயம் டவுன் ரோட்டரி, காங்கேயம் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் காங்கேயம் போக்குவரத்து காவல் துறை ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
காங்கேயத்தில் காங்கேயம் டவுன் ரோட்டரி, காங்கேயம் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் காங்கேயம் போக்குவரத்து காவல் துறை ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை காங்கேயம் டவுன் ரோட்டரி சங்க தலைவர் பி.செல்வராஜ், செயலாளர் நல்லசிவம், பொருளாளர் கே.ஆர்.பி.செந்தில் குமார் ஆகியோர் தலைமையில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மற்றும் காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணியில் வாகன ஓட்டி கள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாராபுரம் சாலையில் தொடங்கி போலீஸ் நிலைய ரவுண்டானா, கோவை சாலை, திருப்பூர் சாலை, பஸ்நிலையம், சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை வழியாக கரூர் சாலை, போலீஸ் நிலைய ரவுண்டானா வந்து மீண்டும் அரசு மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. இதில் காங்கயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசி மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story