ராமநாதபுரம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
X
ராமேஸ்வரத்தில் ராமேஸ்வரம் நகராட்சியை கண்டித்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாமல் செயல்பட்டு வருவதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு எதிராகவும், ராமேஸ்வரம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர் மன்ற தலைவர் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால் ராமேஸ்வரம் நகராட்சி முறையாக செயல்படவில்லை என்பது கண்டித்தும், 17 பேர் பணியாற்ற வேண்டிய ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் மூன்றுக்கும் குறைவான மருத்துவர்கள் பணியில் இருப்பதால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் மருத்துவ சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் வழங்கிட வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story