நாட்றம்பள்ளி அருகே எருது விடும் விழா

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் மாபெரும் எருதுவிடும் திருவிழா 200கும் மேற்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள விஐபி நகரில் மாபெரும் எருதுவிடும் திருவிழா இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைப்பெற்றது. இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலில் இருந்தும் 200 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. மேலும் குறைந்த நொடியில் இலக்கை அடைந்த அடைந்த காளைகளுக்கு, முதல் பரிசாக 100001ரூபாயும், இரண்டாவது பரிசாக 80001 ரூபாயும், மூன்றாவது பரிசாக 70001 ரூபாய் என மொத்தம் 66 பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த எருதுவிடும் திருவிழாவில் இரண்டு டிஎஸ்பி 4 இன்ஸ்பெக்டர் 5 மற்றும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த எருதுவிடும் திருவிழாவில் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். மேலும் இந்த எருது விடும் திருவிழாவில் 20க்கும் மேற்பட்டோர் லேசான காயம் ஏற்பட்டது.
Next Story

