வாலாஜா நகரில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வுக் கூடடம்

வாலாஜா நகரில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வுக் கூடடம்
X
மனித நேய வார விழாவை முன்னிட்டு, அரியலூர் அடுத்த வாலாஜா நகரிலுள்ள சமுதாயக் கூடத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூர், ஜன. 28- மனித நேய வார விழாவை முன்னிட்டு, அரியலூர் அடுத்த வாலாஜா நகரிலுள்ள சமுதாயக் கூடத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ராஜஸ்ரீ, அரசு சிறப்பு வழக்குரைஞர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அரசின் நலத் திட்டங்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் குறித்து அனைத்து மதத் தலைவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை  ஏற்படுத்தினர். முன்னதாக அனைவரும் சமூக நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில், முன்னாள் ஊராட்சித் தலைவர் அபிநயா இளையராஜா, அக்கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story